மத்திய அரசின், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின்
விண்ணப்பங் களை, அண்ணா பல்கலையின், பி.ஆர்க்., கவுன்சிலிங் கமிட்டி
நிராகரித்துள்ளது.
ஜே.இ.இ., தேர்வர்கள்,விண்ணப்பம்,நிராகரிப்பு,அண்ணா,பல்கலை கவுன்சிலிங்கில்,குழப்பம்
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 53 ஆர்க்கிடெக்சர் கல்லுாரிகளில், பி.ஆர்க்.,
படிப்புக்கு, தமிழக அரசின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில்
பங்கேற்க, 'நாட்டா' என்ற, தேசிய ஆர்க்கிடெக்சர் நுழைவு தேர்வில், தேர்ச்சி
பெற்றவர்களின், 1,777 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
அதேபோல, சி.பி.எஸ்.இ., நடத்தும், ஜே.இ.இ., தேர்வில், ஆர்க்கிடெக்சர் தாளில்
தேர்ச்சி பெற்றவர்களையும், பி.ஆர்க்., படிப்பில் சேர்க்க லாம் என,
ஆர்க்கிடெக்சர் கவுன்சில் உத்தர விட்டது. ஆனால், அண்ணா பல்கலை நடத்தும்
கவுன்சிலிங்கில், ஜே.இ.இ., தேர்ச்சி பெற்றவர் களின் விண்ணப்பம் பெறப்பட
வில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர். அவர்களின் விண்ணப்பங் களை ஏற்க, நீதிமன்றம் உத்தர விட் டது.
அதன்படி, வழக்குதொடர்ந்த மூன்று மாணவர் களின் விண்ணப்பங் களை மட்டும்,
அண்ணா பல்கலையின் கவுன்சிலிங் கமிட்டி பெற்றுள்ளது. இந்நிலையில், சில நாட்க
ளுக்கு முன், பி.ஆர்க்., கவுன்சிலிங்குக்கு, 'ரேண்டம்' எண் வெளியிடப்பட்
டது. அப்போது, ஜே.இ.இ., தேர்ச்சி பெற்ற மாணவர் களின் விண்ணப் பங்கள்
பரிசீலிக்கப்பட வில்லை என்று கூறி, பல்கலை நிர்வாகம் நிராகரித்துள்ள தால்,
மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜே.இ.இ., மதிப்பெண்ணை வைத்து, நிர்வாக ஒதுக் கீட்டில் சேரும்படியும்,
கவுன்சிலிங் கமிட்டியினர் அறிவுறுத்திஉள்ளனர்.இது குறித்து, பெற்றோர்
கூறியதாவது:
அரசுஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்ட, 3,000 இடங்க ளுக்கு குறைந்த
விண்ணப்பங்களே வந்து உள்ள தால், கவுன்சிலிங்கின் முடிவில், 1,000 இடங்கள்
காலியாகும். அந்த இடங்களில் கூட மாணவர்களை நிரப்ப, அண்ணா பல்கலை அதிகாரிகள்
முன்வர வில்லை. மாறாக, தனியார் கல்லுாரி களின்
அட்மிஷனுக்கு துணை போவது போல, கவுன் சிலிங் கமிட்டி யினர் செயல்படுகின்ற
னர்.உயர் நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில், விண் ணப்பத்தை ஏற்பது போல
பெற்று, அதை பரிசீ லிக்காமல் நிராகரித் தது, மாணவர்களை அவமானப்படுத்தும்
செயல்.
அரசு நடத்தும் கல்வி நிறுவனமும், பேராசிரி யர்களும் இந்த மனநிலையில்
இருப்பது வேதனையை தருகிறது. எனவே, கவுன்சிலிங் கமிட்டி மற்றும் உயர்கல்வித்
துறை மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள் ளோம்.
பி.ஆர்க்., குறித்த வழக்கை, மீண்டும் விசாரணைக்கு கொண்டு வர, முயற்சி மேற்
கொண்டுஉள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...