கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு இன்னும் கனன்றுக்கொண்டுத்தான்
இருக்கிறது. 13 வருடங்களுக்குப் பின்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்
அனைவரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். 94 பள்ளிக்குழந்தைகள்
உயிரிழப்புகள் என்ன பாடத்தை கற்றுக்கொடுக்கவில்லை.
இந்தச் சம்பவத்துக்கு பின்பு இது போன்ற சம்பவங்கள்
நடைபெறாமல் இருப்பதற்கு ஏதேனும் அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறதா
என்றும், அவசரக் காலங்களில் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை
ஏன் வழங்கவில்லை என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே எஸ்
ஹேஹர் தலைமையினாலன அமர்வு, கும்பகோணம் மற்றும் தப்வாலி ஆகிய இடங்களில் உள்ள
பள்ளிகளில் ஏற்பட்ட விபத்துகளால் அதிக அளவிலான குழந்தைகள் உயிரிழந்த
பிறகும், விதிமுறைகளை வகுக்காதது ஏன் ?எனக் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
இந்த அவசரக் காலங்களில் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் என்ன
என்பதை வரும் 14-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் எனத் தேசிய பேரிடர்
மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது உச்சநீதிமன்றம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...