பாலிடெக்னிக்
கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜி., படிப்பில், பழைய பாடத்திட்டங்களுக்கு
மாற்றாக, புதிய பாடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில், 41 அரசு கல்லுாரிகள் உட்பட, 511 பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும், இரண்டு லட்சம் மாணவர்கள், டிப்ளமா இன்ஜி., படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.
தமிழகத்தில், 41 அரசு கல்லுாரிகள் உட்பட, 511 பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும், இரண்டு லட்சம் மாணவர்கள், டிப்ளமா இன்ஜி., படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.
இந்நிலையில், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, இந்த கல்லுாரிகளில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. அதன்படி, நடப்பு கல்வியாண்டில், சில பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கல்லுாரி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்துள்ளன.இதையடுத்து, புதிய பாடத்திட்டத்தின்படி, பழைய பாடத்திட்டத்துக்கு மாற்றான பாடங்களை, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதற்கான விபரங்களை, www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...