புதுடில்லி: கீழ் கோர்ட்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு, தேசிய
அளவிலான நீதித்துறை சேவை என்ற தேர்வை நடத்தும் மத்திய அரசின் ஆலோசனைக்கு,
பல்வேறு மாநில ஐகோர்ட்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன; இரண்டு ஐகோர்ட்கள்
மட்டுமே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நீதிபதிகளுக்கு,தேசிய,தேர்வு,மாநில,ஐகோர்ட்கள்,எதிர்ப்பு
பரிந்துரை
நாடு முழுவதும் உள்ள கீழ் கோர்ட்களுக்கு, 20 ஆயிரத்து, 502 நீதிபதி
பணியிடங்கள் நிர்ண யிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 2015 டிச., 31
நிலவரப்படி, 4,452 நீதிபதி பணியிடங்கள் காலி யாக இருந்தன. நீதிபதிகள்
நியமனத்துக்கு அந் தந்த மாநில ஐகோர்ட்கள் தனித்தனியாக தேர்வு
களை நடத்தி வருகின்றன.இந்நிலையில், கீழ் கோர்ட்களில் காலியாகும் நீதிபதி
பணியிடங்களை நிரப்புவது குறித்து, மத்திய சட்ட அமைச்சகம், பல்வேறு
பரிந்துரைகளை, சுப்ரீம் கோர்ட்டுக்கு வழங்கியது.
மருத்துவப் படிப்பு
களுக்கு உள்ளது போல், 'நீட்' நுழைவுத் தேர்வு போன்ற தேசிய அளவில் நுழைவு
தேர்வுநடத்த லாம் என, பரிந்துரைக்கப்பட்டது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,
பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடத்துவது போல, தேசிய நீதித்துறை சேவை
என்ற முறையை அறிமுகம் செய்து, தேர்வு நடத்தி, நீதிபதிகளை நியமிக்கலாம்
என்றும், மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது.
வலியுறுத்தல்
இது தொடர்பாக, மாநில ஐகோர்ட்களின் ஆலோ சனைகளை, சுப்ரீம் கோர்ட்
கேட்டிருந்தது. அதன் படி, ஐகோர்ட்கள் அளித்துள்ள பரிந்துரைகளை, மத்திய சட்ட
அமைச்சகம் தொகுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:தேசிய நீதித் துறை
சேவை முறையை அறிமுகம் செய்வதற்கு, சிக்கிம் மற்றும் திரிபுரா ஐகோர்ட்கள்
மட்டுமே ஆதரவு தெரிவித்து
உள்ளன. ஆந்திரா, மும்பை, டில்லி, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம்,
பாட்னா, பஞ்சாப் - ஹரியானா ஆகியவை, இந்த முறைக்கு எதிர்ப்பு
தெரிவித்துள்ளன.
அலகாபாத், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா,
ஒடிசா, உத்தர கண்ட் ஐகோர்ட்கள், பல்வேறு திருத் தங்களை கூறியுள்ளன.
பெரும்பாலான ஐகோர்ட்கள், கீழ்க் கோர்ட்களை நிர்வகிக்கும் கட்டுப்பாடு
தங்களிடம் இருக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளன.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...