'நீட்' அடிப்படையில் நடக்கும் கவுன்சிலிங் நடைமுறை குறித்து,
கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வின் அடிப்படையில், மருத்துவப் படிப்புக்கான, மாநில அளவிலான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
நீட் தேர்வின் அடிப்படையில், மருத்துவப் படிப்புக்கான, மாநில அளவிலான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
கவுன்சிலிங் : தனியார் கல்லுாரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கும் சேர்த்து, முதன்முறையாக, பொது கவுன்சிலிங், இன்று துவங்கி, செப்., 4ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது: நீட் தேர்வுக்கான மாநில தர வரிசை பட்டியலை ஆய்வு செய்ததில், பி.சி., - பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள், 350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஓ.சி., - மற்ற வகுப்பு பிரிவு, 415; ஓ.பி.சி., - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு, 285 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றிருந்தால் மட்டுமே, அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக இட ஒதுக்கீட்டுக்கும், கவுன்சிலிங் நடப்பதால், பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இம்முறையால், பொதுத்தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும் அபாயமுள்ளது. எனவே, ஐ.ஐ.டி., உட்பட கல்வி நிறுவனங்களில், பொதுத்தேர்வு, 'கட்-ஆப்' நிர்ணயித்து, கவுன்சிலிங் நடத்துவது போல, மருத்துவப் படிப்புக்கும், பொதுத்தேர்வு, 'கட்-ஆப்' மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தவறினால், பள்ளிக்கூடங்கள், 'நீட்' பயிற்சி என்ற பெயரில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வியாளர் 'பாடம்' நாராயணன் கூறியதாவது: தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளாக,
தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்து, 250 மாணவர்களே, மருத்துவப்
படிப்பில் சேர்ந்துள்ளனர்.
பொதுத்தேர்வு மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து, கவுன்சிலிங்
நடத்தியதால் தான், பிளஸ் 1 பாடத்திட்டம் கற்பிக்காமல், நேரடியாக, பிளஸ் 2
வகுப்பு கையாளப்பட்டது.
இவர்கள், மருத்துவப் படிப்பில், முதல் பருவத்திலேயே, 'அரியர்' வைக்கின்றனர்.
வாய்ப்பு அதிகம் : நீட் தேர்வு வரவேற்கத்தக்கது; சமீபத்தில் நடந்த நீட்
தேர்விலும், 50 சதவீத கேள்விகள், பிளஸ் 1 பாடத்திட்டத்தில் இருந்து
கேட்கப்பட்டன. மாநில பாடத்திட்டத்தை முழுமையாக படித்தவர்கள், இத்தேர்வில்
வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
அடுத்த ஆண்டு முதல், இத்தேர்வு நடத்தும் அதிகாரத்தை, சி.பி.எஸ்.இ.,
அல்லாமல், தனி அமைப்பிடம் ஒப்படைக்க பரிந்துரைத்துள்ளேன்.இவ்வாறு, அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...