Home »
» ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வட்டிக் குறைப்பு!
நாட்டின் மிகப்பெரிய தனியார்துறை வங்கிகளில் ஒன்றான ஐ.சி.ஐ.சி.ஐ
. ரூ.50 லட்சம் வரையிலான சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ரூ.1
கோடி மற்றும் அதற்குக் குறைவான சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை 3.5
சதவிகிதமாகக் குறைத்தது. அதன் பின்னர் பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் ரூ.50
லட்சம் வரையிலான சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 3.5
சதவிகிதமாகக் குறைத்து அறிவித்தது. அதைத் தொடர்ந்து தனியார்துறை வங்கிகளில்
ஒன்றான ஆக்சிஸ் வங்கி ரூ.50 லட்சம் வரையிலான சேமிப்புகளுக்கான வட்டி
விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 3.5 சதவிகிதமாக நிர்ணயித்தது.
இந்த நிலையில் மற்றுமொரு தனியார்துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வட்டி
விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது.
அதாவது, ரூ.50 லட்சம் வரையிலான சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் 3.5
சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ரூ.50 லட்சத்துக்கு மேற்பட்ட
கடன்களுக்கான வட்டி விகிதம் ஏற்கெனவே இருந்த 4 சதவிகிதத்திலேயே நீடிக்கும்
என்று அவ்வங்கி அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...