சென்னை: அண்ணா பல்கலையில் காலியாக உள்ள இடங்களுக்கு, துணை
கவுன்சிலிங்குக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கு
உட்பட்ட, 518 இன்ஜி., கல்லுாரிகளில், ஆக., 11ல், பொது கவுன்சிலிங்
முடிந்தது.
இதில், 86 ஆயிரம் இடங்களுக்கு, மாணவர்கள் ஒதுக்கீடு
பெற்றனர். இந்த கவுன்சிலிங்கில், 89 ஆயிரம் இடங்கள், மாணவர்கள் இன்றி
காலியாக உள்ளன. இந்நிலையில், காலி இடங்களில் சேர, பிளஸ் 2 முடித்த
மாணவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதற்கான, துணை கவுன்சிலிங்,
வரும், 17ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், நாளை பெறப்படுகின்றன.
தொழிற்கல்வி மற்றும் பொது பாடப்பிரிவுகள் முடித்த, தமிழகத்தைச் சேர்ந்த
மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்
உள்ளிட்டசான்றிதழ்களை, உரிய நகல்களுடன் நேரில் எடுத்து வரவேண்டும் என,
அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது. கவுன்சிலிங்
தொடர்பான கூடுதல் விபரங்களை, தமிழ்நாடு மாணவர் சேர்க்கை கமிட்டியின்,
www.tnea.ac.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...