வருகிற 2019ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் வைஃபை நிலையங்கள்
அமைக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் நிறுவனம் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்த பிறகு, பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட பிற நெட்வொர்க் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பிற பிரிவுகளில் கவனம் செலுத்தி வருவாய் ஈட்டும் முயற்சியில் இறங்கியுள்ள பி.எஸ்.என்.எல்., நாடு முழுவதும் 1 லட்சம் வைஃபை நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி பி.எஸ்.என்.எல். நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1 லட்சம் வைஃபை நிலையங்களை நாடு முழுவதும் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதில், 25,000 நிலையங்கள் கிராமப் புறங்களில் அமைக்கப்படவுள்ளன. மொத்த வைஃபை நிலையங்களில் 70,000 நிலையங்கள் அமைப்பதற்கு எங்களது பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.1,800 கோடியும், 25,000 நிலையங்கள் அமைப்பதற்கு யு.எஸ்.ஓ.எஃப். அமைப்பு ரூ.900 கோடியும் முதலீடு செய்யவுள்ளோம். மேலும் 5,000 வைஃபை நிலையங்கள் வருவாய் பங்கீடு அடிப்படையில் அமைக்கப்படவுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...