வாகன ஓட்டிகள் செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கும்படி பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.
வாகன ஓட்டுனர்கள் அனைவரும், அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'டிராபிக்' ராமசாமி முறையிட்டு, நீதிமன்றம் முன்வந்து, வழக்கை விசாரிக்கும்படி, நேற்று கோரினார். மனு தாக்கலாகும் பட்சத்தில் விசாரணை செய்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
வாகன ஓட்டிகள் அனைவரும், செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்கும்படி, போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், டிராபிக் ராமசாமி ஆஜராகி, ''நீதிமன்றம் முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்,'' என்றார்.
அதற்கு நீதிபதிகள், 'அது குறித்து மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், வழக்கம் போல் விசாரணைக்கு எடுக்கப்படும்' என்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...