தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
தகவல் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது, தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக நூலகங்களில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளுக்கான 68 லட்சம் பாடப்புத்தகங்கள் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. எனவே மாணவர்கள்இருக்கும் இடத்திலேயே புத்தகங்களை இணையதள வசதி கொண்ட செல்போன் மூலம் படிக்க முடியும்.அவர்கள் நூலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை.
இதனை மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது அறிக்கையில் அறிவித்தார். விரைவில் இந்த திட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். மாணவர்கள் நூலகங்களை பயன்படுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் மின்னிதழ்கள் பயன்பாட்டில் 7–வது இடத்தில் உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...