கடந்த 2016ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் 2017ஆம் ஆண்டின் ஜூன்
மாதம் வரையிலான ஒரு வருடத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரூ.7,965 கோடி செலவாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முந்தைய நிதியாண்டில் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி ரூ.3,421 கோடி செலவிட்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் 133 சதவிகிதம் செலவு அதிகரித்துள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதால் செலவு அதிகரித்துள்ளது. இவை தவிர 200 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 8ஆம் தேதி நோட்டுகள் மீது விதிக்கப்பட்ட தடையால் புதிய நோட்டுகளை அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
பழைய 500 ரூபாய் நோட்டு ஒன்றை அச்சடிக்க ரூ.3.09 காசு செலவானது. அதே செலவிலேயே புதிய 500 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன. 1000 ரூபாய் நோட்டு ஒன்றை அச்சடிக்க அரசுக்கு ரூ.3.54 செலவானது. அதே செலவில் தற்போது புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. புதிய நோட்டுகளை அச்சிடுதல் உள்ளிட்ட பணிகள் சேர்த்து ரிசர்வ் வங்கிக்கு மொத்தமாக 2016-17 நிதியாண்டில் ரூ.31,155 கோடி செலவாகியுள்ளது. முந்தைய 2015-16 நிதியாண்டில் செலவான ரூ.14,990 கோடியை விட 107.84 சதவிகிதம் கூடுதலாகும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...