மாணவர்களை அழைக்க வரும்போது, நாகரிகமான உடை உடுத்தி வருமாறும், ஆபாச உடைகளை
தவிர்க்குமாறும், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன.
இவற்றில், அரசு தொடக்க பள்ளிகள், கிராமப்புறங்களில் பள்ளிகள் போன்றவற்றில்,
பெரும்பாலும் மாணவர்களே பள்ளிக்கு சென்று, வீடு திரும்புவர். நகர்ப்புறம்
மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் பள்ளிகள் மற்றும் தனியார்
பள்ளிகளில், மாணவ, மாணவியரை அழைத்து வர, பெரும் பாலும், பெற்றோரில் ஒருவரோ
அல்லது உறவினரோ பள்ளி செல்வது வழக்கம்.
இப்படி, பள்ளிக்கு செல்லும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் உறவினர்களில்
பலர், சரியான உடைகளை அணிந்து செல்வதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.
ஆண்கள், லுங்கியை, கால் முட்டிக்கு மேல் கட்டி செல்வது; அரைக்காலுக்கு மேல்
டிரவுசர்கள் அணிந்து செல்வது, அழுக்கான உடைகளை அணிந்து ஒழுக்கமின்றி
பள்ளிக்குள் நுழைவதாக புகார்கள் உள்ளன. பெண்களில் சிலர் அலங்கோலமாக, மாணவ
மாணவியரின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும், முகம் சுளிக்கும்
வகையிலும், உடை அணிந்து செல்வதாகவும் பள்ளிகள் குற்றம் சாட்டி
உள்ளன.இதையொட்டி, சில அரசு மகளிர் பள்ளிகளிலும், தனியார் பள்ளி
களிலும், பெற்றோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.'நாகரிகமான உடை
அணிந்து வர வேண்டும். மாணவ மாணவியருக்கு தவறான புரிதலை ஏற்படுத்தும்
வகையில், அழுக்கான, ஆபாசமான உடைகளை அணிந்து வரக்கூடாது.'லுங்கிகளை மடித்து
கட்டியும், சிறிய
அரைக்கால் டிரவுசர் அணிந்தும், பள்ளிக்குள் நுழையக்கூடாது' என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...