பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகைக்கு
விண்ணப்பிக்க, கடைசி தேதியை மத்திய அரசுஅறிவித்துள்ளது.
பள்ளி, கல்லுாரி
மாணவர்களுக்கு, மாநில அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகைகளை
வழங்கி வருகிறது.
பெரும்பாலான கல்வி உதவித்தொகை திட்டங்களை, மத்திய அரசு
வழங்குகிறது. ஆனால், சில பள்ளிகள், மாணவர்களை கணக்கு காட்டி உதவித்தொகை
பெற்று, அவற்றை மாணவர்களிடம் வழங்காமல், ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்தன.இதை
தொடர்ந்து, கல்வி உதவித்தொகையை மாணவர்களின்வங்கிக்கணக்கில் நேரடியாக
செலுத்தும் திட்டத்தை, சில ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு அறிமுகம்
செய்தது.
அதேபோல், மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில், ஆன் - லைன் விண்ணப்ப பதிவு முறையும் துவங்கப்பட்டது.மாணவர்கள், scholarships.gov.in என்ற இணையதளத்தில், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு திட்டத்திலும் வழங்கப்படும் தொகை எவ்வளவு; தகுதியானவர்கள் யார் போன்ற விபரங்கள், இணையதளத்தில் உள்ளன.ஏற்கனவே, இணையதளத்தில் பதிவு செய்து, உதவித்தொகை பெறும் மாணவர்கள், இந்த ஆண்டுக்கு புதுப்பிக்க, வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதே போல், புதிதாக விண்ணப்பிப்போர், அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...