புதிய நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒழுங்குமுறைகளை மாற்றியமைக்கக் கூடாது என்று வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொலைத் தொடர்புத் துறையில் புதிய நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒழுங்குமுறைகளை மாற்றியமைக்கக் கூடாது என்று மத்திய அரசை வோடஃபோன் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான விட்டோரியோ கோலோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தொலைத் தொடர்பு போன்ற மிக முக்கிய துறையில் புதிய நிறுவனங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப கட்டுப்படுத்தப்படுவது விரும்பத்தக்கதாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.மேலும், மொபைல் துண்டிப்புக் கட்டணத்தைக் குறைத்தால், இந்தத் துறையை கட்டமைக்க முதலீடு செய்த அனைத்து நிறுவனங்களும் அழிக்கப்பட்டுவிடும் என்று அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், ஆதித்ய பிர்லா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களின் தலைவரான குமார் மங்கலம் பிர்லா ட்ராய்க்கு எழுதிய கடிதத்தில் இதே கருத்தை முன்வைத்தார். மொபைல் துண்டிப்புக் கட்டணம் எனப்படும் இணைப்புக் கட்டணத்தை நீக்க ஜியோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஐடியா, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்களோ இந்தக் கட்டணத்தை உயர்த்தக் கோரிக்கை விடுத்துள்ளன. மொபைல் துண்டிப்புக் கட்டணத்தை குறைத்தால், பெரியளவில் தொலைத் தொடர்புத் துறை பாதிக்கப்படும் எனவும், லாபகரமாக இல்லாத கிராமப் புறங்களில் தொலைத் தொடர்புச் சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும் எனவும், இதனால் பொதுமக்களுக்கு தொலைத் தொடர்புச் சேவைகள் கிடைக்காமல் போகும் எனவும் விட்டோரியோ கோலோ தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...