ஆசிரியர் தினம் தொடர்பாக சுற்றறிக்கை மத்திய அரசுக்கு மேற்கு வங்கம் எதிர்ப்பு
ஆசிரியர் தினம் (செப்டம்பர் 5) தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை
அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கைக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஆசிரியர் தினம் தொடர்பாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையை எங்களால் பின்பற்ற முடியாது.
ஒரு குறிப்பிட்ட அம்சம் தொடர்பாக கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளை ஆசிரியர்
தினத்தன்று நடத்த வேண்டும் என்று அந்த அமைச்சகம் அறிவுறுத்தியிருப்பது
நகைப்புக்குரியது.
ஆசிரியர் தினத்தை எப்படி கொண்டாட வேண்டும் என்பது மேற்கு வங்க அரசுக்குத்
தெரியதா? இத்தனை ஆண்டுகளாக அந்த தினம் எப்படி கொண்டாடப்பட்டு வந்ததோ அதைப்
போலவே கொண்டாடுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் மாநில அரசு ஏற்கெனவே
சுற்றறிக்கையை அனுப்பிவிட்டது. ஆசிரியர் தினமான, முன்னாள் குடியரசுத்
தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை எவ்வாறு கொண்டாட வேண்டும்
என்பது மேற்கு வங்க அரசுக்குத் தெரியும் என்று பார்த்தா சாட்டர்ஜி
தெரிவித்தார்.
முன்னதாக, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அனுப்பிய சுற்றறிக்கையில்,
"தூய்மை இந்தியா திட்டம் தொடர்பாக கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளை
ஆசிரியர் தினத்தில் நடத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...