தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை அறிவிக்க, இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், அரசியல்வாதிகளிடம் இருந்து சிபாரிசுகள் குவிந்துள்ளன.
தமிழக அரசு சார்பில், ௩௭௯ பேருக்கு, நல்லாசிரியர்
விருது வழங்கப்படுவது வழக்கம். அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முதன்மை
கல்வி அதிகாரிகள் தலைமையிலான தேர்வு குழு சார்பில், மாவட்ட அளவில்
பரிந்துரை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல்களை, மாநில
தேர்வுக் குழு பரிசீலித்து, இறுதி பட்டியலை, அரசுக்கு அளிக்கும். மாவட்ட
பட்டியலிலேயே, பலர், சிபாரிசுகளால் இடம் பிடித்துள்ளதாக தெரிகிறது.
தற்போது, இறுதி பட்டியலில், தங்களுக்கு வேண்டியவர்களை சேர்க்க,
அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் என, பல்வேறு தரப்பினரிடம் இருந்து,
சிபாரிசுகள் வந்துள்ளன. அதனால், இறுதி பட்டியல் தயாரிக்கும் பணி, தாமதம்
ஆகியுள்ளது. அதனால், நல்லாசிரியர் விருது பட்டியலை, அமைச்சரகத்தின்
ஒப்புதலுடன் தயார் செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்,
'திறமையான ஆசிரியர்களை, எந்த விதத்திலும் புறக்கணித்து விடக்கூடாது' என,
கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...