சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில், இளநிலை உதவியாளர்
பணிக்கான எழுத்து தேர்வு முடிந்து, 18 மாதங்கள் ஆகியும் இன்னும் முடிவுகள்
அறிவிக்கப்படவில்லை.
சி.எம்.டி.ஏ.,வில், இளநிலை உதவியாளர், உதவி திட்ட அதிகாரி, உதவி பொறியாளர் உள்ளிட்ட, 176 பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கு, 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். சென்னை அண்ணா பல்கலை வாயிலாக, 11 இடங்களில் இத்தேர்வு நடந்தது. தேர்வு முடிந்து, 18 மாதங்கள் ஆகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால், தேர்வு எழுதியவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, சி.எம்.டி.ஏ., வட்டாரம் கூறியதாவது: இளநிலை உதவியாளர் பணிக்கான கேள்வித்தாளில், 80 மதிப்பெண்களுக்கு பட்டப்படிப்பு நிலையில் இருந்து கேள்விகள் இடம்பெற வேண்டும்; 20 மதிப்பெண்களுக்கு, ஆங்கிலம், தமிழில் உரைநடை கட்டுரை எழுதுமாறு கேள்வி இருக்க வேண்டும். ஆனால், அண்ணா பல்கலை தயாரித்த கேள்வித்தாளில், நடைமுறைக்கு மாறாக கொள்குறி வகை எனப்படும், 'ஆப்ஜக்டிவ்' வகை கேள்விகளே இடம் பெற்று இருந்தன. அதனால், தேர்வு முடிவை அறிவித்தால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வர். அப்படி நடந்தால், தேர்வு ரத்தாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.
Question taken by anna university and chennai corporation both are irresponsible answer
ReplyDeleteEducation loans will help you in planning your life after graduation. However, an education loan like every loan is a huge financial obligation.http://vcbookandauthorfair.com/
ReplyDelete