பொதுவாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் போலி கணக்குகளை தெரிந்துகொள்ள வெரிஃபைடு குறியீடு பயன்படுகிறது,
மேலும் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ பக்கத்தை தெரிந்து கொள்ள பெயரின் பக்கத்தில்நீல வண்ண நிறத்தில் வெரிஃபைடு குறியீடு இருக்கும். கூடிய விரைவில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளத்தில் உள்ள வெரிஃபைடு குறியீடு வாட்ஸ்அப்பிலும்இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் வெரிஃபைடு குறியீடு பச்சை நிறத்தில் வெளிவரும் என வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது, மேலும்இந்தப் பயன்பாடு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி செயல்படும் போலி கணக்குகளைகண்டறிய உதவுகிறது இந்த வெரிஃபைடு குறியீடு, மேலும் இவற்றில் பல்வேறு நண்மைகள் உள்ளது. பல தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்க இவை உதவும். கூடிய விரைவில் வாட்ஸ் மூலம் பணம் அனுப்பும் வங்கி சேவையை கொண்டு வருகிறது வாட்ஸ்அப் நிறுவனம், மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது வாட்ஸ்அப்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...