'பள்ளிகளில் விளையாட்டும் உடற்கல்வியும் கட்டாயமாக்கட்டுள்ளன. இவற்றைக்
கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்க்கக்பட்டுள்ளதாக' மாநிலங்களவையில் மத்திய
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல்
அறிவித்துள்ளார்.
'சிபிஎஸ்இ பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளைப் போன்றே மாநில கல்வி
வாரியத்தின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் செயல்பட வேண்டும்.
அனைத்துப் பள்ளியிலும் மைதானங்கள், விளையாட்டுக்கான உபகரணங்களையும்,
கருவிகளையும் கொண்டிருக்க வேண்டும், உடற்கல்வி போன்றவற்றுக்கும்
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவை அனைத்தும் கல்வி உரிமைச் சட்டத்தின்
கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக'த் தெரிவித்த மத்திய அமைச்சர் விஜய்கோயல்,
'ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒரு
நாளைக்குக் குறைந்தது 45 நிமிடங்கள் விளையாட்டு அல்லது உடற்கல்வி என்று
நேரம் ஒதுக்க வேண்டும். இதைப்போலவே, யோகா, நீச்சல், தேசிய மாணவர் படை
உள்ளிட்ட எட்டு அம்சங்களில் இரண்டு அம்சங்கள் உயர்கல்வி பயிலும்
மாணவர்களுக்குக் கட்டாயம்' என்றும் அறிவித்திருக்கிறார்.
பள்ளிகளில் யோகாவைக் கட்டாயமாக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...