கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் பள்ளி தாளாலர் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி பயங்கர தீ விபத்து.
இந்த கோர விபத்தில் 94 குழந்தைகள் எரிந்து கரிக்கட்டைகளாயினர்.
இதுதொடர்பாக பள்ளி தாளாளர் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் பள்ளி தாளாளர் பழனிச்சாமி அவரது மனைவி சரஸ்வதி ஆகியோருக்கு தஞ்சை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதில் 11 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பள்ளி தாளாளர் பழனிச்சாமி இதுவரை அனுபவித்த தண்டனை போதும் என உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. தண்டனை பெற்ற கல்வி அதிகாரிகளையும் சென்னை ஹைகோர்ட் விடுதலை செய்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...