பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் நடைமுறையை ரத்து செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், வாஞ்சி மணியாச்சி முதல் நெல்லை வழியாக நாகர்கோவில் வரையிலான பாதையில் இரட்டை மின்ரயில் பாதை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
1,112 கோடி ரூபாய் செலவில், இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. 120 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் பாதையை, 4 ஆண்டுகளில் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போல், வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் நடைமுறையை ரத்து செய்யவும், பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...