சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்ஃபோன் திங்கள்கிழமைஅறிமுகமாகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்ஃபோன், நாளை மாலை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஃபோன் MDT6 மற்றும் MDT6S ஆகிய இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதன் சிறப்பம்சங்கள்:
5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 425 பவர்டு ஸ்னாப்டிராகன் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ், 128 ஜிபி வரை மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, MIUI 9 -உடன் கூடிய ஆன்டிராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளம், டூயல் சிம் ஸ்லாட், 13 மெகாபிக்சல் கொண்ட ரியர் கேமரா, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, இன்ஃப்ரார்ட் சென்சார், 3000mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதன் மதிப்பு 9,600 ரூபாய் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...