Home »
» மருத்துவ சேர்க்கையில் கூடுதலாக 57 'சீட்'
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் நிரம்பாத, 57 இடங்கள், மாநில
ஒதுக்கீட்டுக்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
நாடு முழுவதும் உள்ள,
அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.அதில், தமிழகத்தில்
இருந்து, 435 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டன. இதற்கான
கவுன்சிலிங், சமீபத்தில் நடந்தது.
தமிழக மருத்துவக் கல்வி தேர்வு குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''அகில இந்திய ஒதுக்
கீட்டில் நிரம்பாத, 57 மருத்துவப் படிப்பு இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு
திருப்பி கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த இடங்கள், மாநில சேர்க்கையில்
இடம்பெறும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...