வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.2.97 கோடி விதித்து டிராய் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்குள் மேற்கொள்ளப்படும் அழைப்புகள் அனைத்தும் உள்ளூர் அழைப்புகளாகவே கருதப்பட வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை அறிவித்திருந்தது. ஆனால், சில தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.எம்.எல். ஆகிய நெட்வொர்க்குகளுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஐடியா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலித்ததாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அந்தத் தொகையை வாடிக்கையாளரிடம் திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் அத்தொகையை வாடிக்கையாளர்களுக்கு திருப்பிச் செலுத்தாமல் ஐடியா நிறுவனம் தவறியுள்ளது.
எனவே, ஐடியா நிறுவனம் 2005ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2007ஆம் ஜனவரி மாதம் வரையில் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வசூலித்த ரூ.2,97,90,173 தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. இத்தொகையானது தொலைத் தொடர்பு நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்தில் (டி.சி.இ.பி.எஃப்) செலுத்தப்படவுள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களிடம் அதிக தொகை வசூலித்துவருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், தற்போது ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பிறகு நிறுவனங்கள் தங்களது கட்டணங்களைக் குறைத்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...