டெல்லி: நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான கணக்கெடுப்பின் படி நாட்டிலுள்ள
37 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகளில் மின்சார வசதியே இல்லை என்ற தகவல்
தெரிய வந்துள்ளது.
இதுபற்றி கேள்வி ஒன்றிற்கு மாநிலங்களவையில் மனிதவள
மேம்பாட்டு துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாகா, எழுத்து மூலம்
பதிலளித்துள்ளார். அவரது பதிலில் நாடு முழுவதிலுமுள்ள பள்ளிகளில், தேசிய
கல்வி திட்ட பல்கலை மற்றும் நிர்வாகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த
ஆய்வானது உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எவ்வாறு
செய்யப்பட்டுள்ளது என்பதை சாராம்சமாக கொண்டிருந்தது.
ஆய்வின் இறுதியில் நாட்டிலுள்ள 62.81 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே உள்கட்டமைப்பு வசதிகளில் முக்கியமானதான மின்சார வசதி உள்ளதாக கண்டறியப்பட்டது. மேலும் பள்ளிகளில் மின்சார வசதி கொண்ட மாநிலங்களின் பட்டியலில் ஜார்கண்ட் மாநிலமே கடைசி இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜார்கண்டில் 19% பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்து மின்வசதி குறைவாக கொண்ட பள்ளிகள் உள்ள மாநிலங்கள் அசாம் - 25%, மேகாலயா - 28.54%, பீகார் - 37.78%, மத்திய பிரதேசம் - 28.80%, மணிப்பூர் - 39.27%, ஒடிசா - 33.03%, திரிபுரா - 29.77% உள்ளிட்டவை என கூறப்பட்டுள்ளது. மேலும் பாண்டிச்சேரி, டாமன், டயூ, லட்சத்தீவு, டெல்லி, சண்டிகர், தாபர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகள் 100 சதவீதம் மின்சார வசதி உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...