சென்னை, 'அரசு மருத்துவ கல்லுாரிகளில், 2,653 கூடுதல் இடங்களில், மாணவர்
சேர்க்கை நடத்த அனுமதி வேண்டும்' என, இந்திய மருத் துவ கவுன்சிலான,
எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கூடுதலாக,2,653,எம்.பி.பி.எஸ்., இடங்கள்,மருத்துவ கவுன்சிலிடம்,தமிழகம்,கோரிக்கை
தமிழகத்தில், 'நீட்' தேர்வு குழப்பத்தால், எம்.பி. பி.எஸ்., - பி.டி.எஸ்.,
மாணவர் சேர்க்கையை நடத்த முடியவில்லை. 'நீட்' தேர்வில் இருந்து,
இந்தாண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும், தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு,
மத்திய அமைச்சகங்கள் அனுமதி கொடுத்துள்ளன. இதற்கிடையில், 'நீட்' தேர்வை
ஆதரிக்கும்
மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், 22ம் தேதி வரை, மாணவர் சேர்க்கை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், மாநில பாடத் திட்டத்தில்படித்த மாணவர் களுக்கும், 'நீட்' தேர்வு
எழுதிய மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், மாணவர் சேர்க்கை நடத்த,
உச்சநீதிமன்றம் அறி வுறுத்தி உள்ளது. இதனால், அவசர சட்டம் நடை முறைக்கு
வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தற்போது, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி. பி.எஸ்., படிப்பில், 3,050
இடங்கள் உள்ளன. அதில், 456 இடங்கள் அகில இந்திய கவுன்சிலிங்கிற்கு சென்று
விட்டன. அதில், நிரம்பாத, 57இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு
திரும்பியுள்ளன.
இந்நிலையில், 'இந்தாண்டு மட்டும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் 2,653
கூடுதல் இடங்களை ஏற் படுத்தி, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும்'
என, எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு கோரி யுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை
எம்.சி.ஐ.,
தலைவரிடம், தமிழக சுகாதாரத்துறை செய லர், ராதாகிருஷ்ணன், நேற்று வழங்கினார்.
இதுகுறித்து, எம்.சி.ஐ., தன் முடிவை, நாளை அறிவிக்கும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. 'கூடு தல் இடங்களுக்கு அனுமதியளிக்கும் பட்சத்
தில், கட்டமைப்பு மற்றும் பேராசிரியர்கள் வசதி மேம்படுத்தப்படும்' என,
தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...