Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

11th Public Exam ஐ எதிர்த்த வழக்கில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது

           11th Public Exam ஐ எதிர்த்து மதுரை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
வாதம் முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு  ஒத்தி வைக்கப் பட்டது.


11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த அரசு பிறப்பித்துள்ள அரசாணையைய ரத்து செய்ய கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல் 11ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இதை எதிர்த்து கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அப்போது அரசு சாார்பில் தாக்கல் செய்த மனுவில், போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில்தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம்.
பல பள்ளிகளில் 11ம் வகுப்பு பாடத்தை கற்றுக்கொடுக்காமல், பிளஸ் டூ பாடங்களை கற்றுக்கொடுக்கிறார்கள். பொதுத்தேர்வுஅறிமுகமானால்தான் 11வது வகுப்பு பாடத்தை கற்பிப்பார்கள்.11வது வகுப்பு பாடத்தை கற்காததால் போட்டித்தேர்வுகளின்போது மாணவ, மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம். இவ்வாறு வாதிடப்பட்டது.
இதனிடையே, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு அரசாணையை ரத்து செய்ய கோரும் வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.








3 Comments:

  1. It is student's life. Immediate judgement will be appreciable

    ReplyDelete
  2. It should be announced fastly because students eants to study for it

    ReplyDelete
  3. Pls ban the public exam we are suffering a lot and and pls...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive