மதுரை, மதுரை காமராஜ் பல்கலை உயிரி அறிவியல் பள்ளியின் ஒருங்கிணைப்பு வள
மையத்தின் சிறப்பான செயல்பாடுகளையடுத்து ஆய்வு மற்றும் திறன் மேம்பாடு
பணிகளுக்காக பல்கலை மானியக் குழு(யு.ஜி.சி.,) 2வது கட்டமாக 10 கோடி ரூபாய்
வழங்கியுள்ளது.
இதுகுறித்து துணைவேந்தர் செல்லத்துரை கூறியதாவது:
உயிரி அறிவியல் மற்றும் உயிரிதொழில்நுட்ப துறைகளில், ஆய்வு பணிகளுக்காக
யு.ஜி.சி., 2008-13 காலத்திற்கு பத்து கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்நிதியின்
மூலம் ஒருங்கிணைப்பு வள மையம் துவக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆய்வு பணிகளை திறம்பட மேற்கொள்ள உயர்ரக ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டது.
மேலும், கோடை கால கருத்தரங்குகள், உயிரி அறிவியல் துறையில் பல்வேறு வித ஆய்வுகள் நடந்தன.
மேலும், 2 கோடி ரூபாயில் ஆய்வு மாணவர்களுக்காக விடுதி
அமைக்கப்பட்டது.மையத்தின் சிறப்பான செயல்பாடுகளை அடுத்து யு.ஜி.சி.,
2017-22 காலத்திற்கு 2வது கட்டமாக மேலும்
10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
'ஜினோமிக்ஸ்', 'ஹெல்த்' பிரிவுகளில் ஆய்வுகளை மேற்கொள்ள ஆராய்ச்சி பேராசிரியர்கள், மாணவர்களுக்கு இந்நிதி
செலவிடப்படும். விஞ்ஞானிகளை வரவழைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
கருத்தரங்குகள், மாணவர் திறன் மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர் ஹூசைன் முனவார் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்,
இப்பல்கலைக்கு 'பர்ஸ்' திட்டத்தில் வழங்கிய 7 கோடி ரூபாயிலும், ஆய்வக மேம்பாடு பணிகள் நடக்கின்றன.
தென் மாவட்டங்களில் பனைமரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குட்டை ரக
பனைமரங்களை உருவாக்க ஆய்வு பணிகளை உயிரிஅறிவியல் துறை துவக்கியுள்ளது.
உலகின் தலைசிறந்த 200 பல்கலைகளில் இப்பல்கலையும் ஒன்றாக தரம் உயரும்
வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறினார்.
பதிவாளர் சின்னையா மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
நீரிழிவை குணப்படுத்தும் கடற்பாசி ரசாயனம்
பேராசிரியர் வரலட்சுமி கூறியதாவது: உயிரிஅறிவியல் துறை சார்பில் நீரிழிவு
நோயை குணப்படுத்த கடற் பாசியிலிருந்து புதிய ரசாயன பொருள்
தயாரிக்கப்பட்டுள்ளது. அதை விலங்குகளுக்கு வழங்கிய போது நீரிழிவு நோய்
குணமாவது தெரிய வந்தது. இந்த ஆய்வை அடுத்தகட்டத்திற்கு கொண்டு
செல்லவுள்ளோம்.
இவ்வாறு கூறினார்.
பேராசிரியர் ஆரோக்கியதாஸ், ''இயற்பியல், வேதியியல் உட்பட பல துறைகளில் 62
கண்டுபிடிப்புகளை கண்டறிந்துள்ளேன். இதில் 35க்கு காப்புரிமை
பெறப்பட்டுள்ளது,'' என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...