பிளஸ் 1 பொதுத் தேர்வில், தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடத்திலும்,
குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, அரசு
உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 1 வகுப்பிற்கு, மாநில அளவில், பொதுத்
தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று அரசால்
வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
தேர்ச்சி பெற, மொழிப் பாடங்களில், தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டை,
கண்டிப்பாக எழுத வேண்டும். இரு தாள்களிலும்சேர்த்து, எழுத்து தேர்வில்,
சராசரியாக கணக்கிடப்படும், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 35
மதிப்பெண்கள்பெற்று இருக்க வேண்டும். தாள்களும் சேர்த்து, எழுத்து
தேர்வின், சராசரி மதிப்பெண்ணான 90 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 25
மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் lசெய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில்,
எழுத்து தேர்வில், 70 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 15 மதிப்பெண்கள்
பெற வேண்டும். செய்முறை வகுப்புகளில் பங்கேற்று, செய்முறை பொதுத் தேர்வு
எழுதி இருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்செய்முறைத் தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி எழுத்துத் தேர்வு பாடங்களில், தேர்ச்சி பெற,எழுத்து தேர்வில், 90 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற வேண்டும். அக மதிப்பீடு, எழுத்து தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக, குறைந்த பட்சம், 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் l தொழிற்கல்வி செய்முறை தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக, குறைந்த பட்சம், 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எழுத்து தேர்விற்கு, செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில், 70 மதிப்பெண்களும், செய்முறைத்தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி பாடங்களின் எழுத்து தேர்விற்கு, 90 மதிப்பெண்களும், ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.மொழிப் பாடங்களில், எழுத்து தேர்விற்கான, இரு தாள்களுக்கும், தலா, 90 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள், 20; இரு மதிப்பெண் குறு வினாக்கள் ஏழு; மூன்று மதிப்பெண், சிறு வினாக்கள் ஏழு; ஐந்து மதிப்பெண் பெரு வினாக்கள் ஏழு, ஆகியவற்றுக்கு விடை அளிக்க வேண்டும்.
செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள்,15; இரு மதிப்பெண் குறு வினாக்கள் ஆறு; மூன்று மதிப்பெண் சிறு வினாக்கள் ஆறு, ஐந்து மதிப்பெண் பெரு வினாக்கள் ஐந்து ஆகியவற்றுக்கு விடை அளிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...