மேஷம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும். புதியவர்கள்
நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக
ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ரிஷபம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில்
உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள்.
உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை
வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
மிதுனம்
உங்கள்
பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு
மதிப்பளிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண
முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி
வருவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
கடகம்
பணப்புழக்கம்
அதிகரிக்கும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வழக்கில் திருப்பம்
ஏற்படும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின்
உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
சிம்மம்
புதிய
முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக்
கொள்வார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம்
உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
கன்னி
புதிய
கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில்
கவனம் தேவை. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் வரும்.
உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
துலாம்
தைரியமாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக
அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு
கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள்.
உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
விருச்சிகம்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும்.
குடும்பத்தில் அமைதி திரும்பும். அழகு, இளமைக் கூடும். நேர்மறை சிந்தனைகள்
தோன்றும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பழைய
சிக்கல்கள் தீரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
தனுசு
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக
ஆதங்கப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு
ஆளாக்குவார்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில்
அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து
நீங்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
மகரம்
எடுத்த
வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம்
கோபப்படாதீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். புது வேலைக் கிடைக்கும்.
வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில்
மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
கும்பம்
எதையும்
சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
மீனம்
எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர்
உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில்
வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை
மதிப்பார்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...