மேஷம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்--மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப்
போவது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால்
அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
ரிஷபம்
பிள்ளைகளால்
மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும்.
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் லாபம்
பெருகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
மிதுனம்
கனிவான
பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய
விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள்
கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
கடகம்
புதிய
சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது
வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
சிம்மம்
நட்பு
வட்டம் விரியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாய்வழி
உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள்
உதவுவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
கன்னி
திட்டவட்டமாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக
சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு
நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
துலாம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். விருந்தினர் வருகை
அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. சகோதரர் உதவுவார். வியாபாரத்தில்
புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி
வரும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
விருச்சிகம்
ராசிக்குள்
சந்திரன் இருப்பதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள்.
குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். பேச்சில் காரம் வேண்டாம். உதவி
கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை
தவிர்க்கவும். உத்யோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
தனுசு
குடும்பத்தினருடன்
வீண் வாக்குவாதம் வந்துப் போகும். உடன்பிறந்தவர்களால் செலவும்,
மனக்கசப்பும் வந்து நீங்கும். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை
அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
மகரம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில்
இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வாகன வசதிப்
பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
கும்பம்
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.
பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்
குறையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில்
மேலதிகாரி பாராட்டுவார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
மீனம்
குடும்பத்தாரின்
விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.
கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில்
தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து
உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...