மேஷம்
பால்ய
நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும்.
வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில்
போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ரிஷபம்
குடும்பத்தில்
உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்
அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில
சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
மிதுனம்
குடும்பத்தாரின்
ஆதரவுப் பெருகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். முகப்பொலிவுக்
கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி
மதிப்பார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
கடகம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத்
தூக்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்.
உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக
இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம்
வேண்டாம்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
சிம்மம்
எதிர்காலம்
பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் பிரச்னைகள்
வரக்கூடும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். சொத்து விஷயத்தில்
அவசர முடிவுகள் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்.
உத்யோகத்தில் நிதானம் அவசியம்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
கன்னி
திட்டமிட்ட
காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக
இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.
வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில்
உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
துலாம்
குடும்பத்தினருடன்
மனம் விட்டு பேசுவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். பிரபலங்கள்
அறிமுகமாவார்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில்
சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள்
எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள்
ஒத்துழைப்பார்கள். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள்
வசூலாகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
தனுசு
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று
ஆதங்கப்படுவீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். சிலர் உங்களை
தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.
உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
மகரம்
கடினமான
காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்
கொள்வார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்களின்
நிர்வாகத்திறமை வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
கும்பம்
கனிவாகப்
பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை
நாடுவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுப் பொருள் சேரும்.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின்
ஆலோசனை ஏற்கப்படும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
மீனம்
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்
என்பதை கண்டறிவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில்
புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள்
தேடி வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...