மேஷம்
எதிர்பார்த்த
வேலைகள் தடையின்றி முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில்
கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை
முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ரிஷபம்
துணிச்சலாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக
இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில்
உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மிதுனம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். நீண்ட நாள்
பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்களால்
ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதிய
சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
கடகம்
ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப்
போட்டு பார்க்க வேண்டி வரும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள்.
புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில்
தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
சிம்மம்
சிக்கனமாக
இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மறைமுக
நெருக்கடி வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
கன்னி
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி
செய்வீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து
ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன்
செயல்படுவார்கள். அலுவலகத்தில் மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
துலாம்
எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
விருச்சிகம்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில்
இருந்த கூச்சல், குழப்பம் விலகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து
முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது முதலீடு
செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
தனுசு
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில்
உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. விமர்சனங்களை கண்டு
அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
மகரம்
உங்கள்
பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப்
பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, அணிகலன் சேரும். வியாபாரத்தில்
புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து
உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கும்பம்
பணப்புழக்கம்
அதிகரிக்கும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப் பதவியில்
இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில
நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்
படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
மீனம்
மற்றவர்களை
நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.
உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை
குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...