மேஷம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூர் பயணங்களால்
மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புது
வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை
வாங்குவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். விருந்தினர்களின் வருகையால்
வீடு களைக்கட்டும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத
இடத்திலிருந்து உதவி கிட்டும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை
மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
மிதுனம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும்.
வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உதவுவதை
போல் உபத்திரவம் தருவார்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச
வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள்.
உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
கடகம்
கணவன்-மனைவிக்குள்
வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.
அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். உடல் நலம்
பாதிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
சிம்மம்
குடும்பத்தில்
ஒற்றுமை பிறக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க
நேரிடும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின்
அன்புத் தொல்லை விலகும். வியாபாரத்தில் வி. ஐ. பிகள்
வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கன்னி
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி
வந்துப் பேசுவார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். பிரபலங்கள்
அறிமுகமாவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில
சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
துலாம்
உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால்
மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு-. கடனாக கொடுத்த பணம் கைக்கு
வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை
எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
விருச்சிகம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும்.
கோபத்தால் இழப்புகள் ஏற்படும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக்
கொண்டிருக்க வேண்டாம். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது
நல்லது. வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள்.
உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
தனுசு
புதிய
கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். சகோதரங்கள் பாசமழைப்
பொழிவார்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வாகனப் பழுதை சரி
செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக்
கிடைக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
மகரம்
குடும்பத்தாரின்
எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது
அனுபவம் உண்டாகும். இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். நெடுநாட்களாக
நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் பழைய
சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு
கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
கும்பம்
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை
நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக்
கொள்வார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம்
கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
மீனம்
நீண்ட
நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பால்ய நண்பர்கள் உங்கள்
தேவையறிந்து உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்
தேடி வரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...