மேஷம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டிய
பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தடைப்பட்ட வேலைகள்
முடியும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
ரிஷபம்
ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும்.
குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். ரோகிணி
நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். சந்தேகப் புத்தியால்
நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக
வரும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
மிதுனம்
விடாப்பிடியாக
செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும்.
பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை
வாட்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில்
மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
கடகம்
நீண்ட
நாள் ஆசைகள் நிறைவேறும். சொந்த-பந்தங்கள் தேடி வரும்-. புது வேலை அமையும்.
பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில்
தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை
கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
சிம்மம்
உங்கள்
பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உங்களிடம் பழகும்
நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு
நிகழும். வி. ஐ. பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை
முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
கன்னி
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.
கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில்
திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
துலாம்
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும்.
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும்.
முன்கோபத்தால் பகை உண்டாகும். சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில்
ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள்
வரும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
விருச்சிகம்
தன்
பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய
பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில்
புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
தனுசு
பணப்புழக்கம்
அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுக்காக சில உதவி செய்வீர்கள். வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில்
அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு
பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
மகரம்
புதிய
சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள்.
சிக்கனமாக செலவழித்-து சேமிக்கத் தொடங்குவீர்கள். யோகா, தியானம் என மனம்
செல்லும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புதிய
முயற்சிகள் பலிதமாகும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
கும்பம்
எதிர்ப்புகள்
அடங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாயாரின் உடல்
நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
அலுவலகத்தில் அமைதி நிலவும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
மீனம்
சவாலில்
வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின்
திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...