மேஷம்
எதிலும்
வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக
இருப்பார்கள். சிலர் உங்கள் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில்
உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
ரிஷபம்
தன்னிச்சையாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி
செய்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று
வருவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.
உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மிதுனம்
காலை
9. 51 மணி வரை சந்திரஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் வந்துச் செல்லும்.
கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு
காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள்
உதவுவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி
ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
கடகம்
காலை
9. 51 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி,
மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப்
புரிந்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். சாலைகளை கவனமாக
கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம்.
உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
சிம்மம்
கடினமான
காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும்.
கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி
மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக
ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
கன்னி
எதிர்பாராத
பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று
வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக்
கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
துலாம்
மற்றவர்களை
நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.
உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை
குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள்.
உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
விருச்சிகம்
எதிர்பாராத
இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள்.
தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். புது வேலைக் கிடைக்கும். கலைப்
பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.
உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
தனுசு
திட்டவட்டமாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை
பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் தலைமைக்கு
நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
மகரம்
காலை
9. 51 வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும்.
மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலகி
நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து
முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கும்பம்
காலை
9. 51 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் ஒரே முயற்சியில் முடிக்க
வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். வாகனத்தை இயக்கும் போது
அலைப்பேசியில் பேச வேண்டாம். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும்
கலங்காதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ
பிரச்னை வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
மீனம்
சில
வேலைகளை அலைந்து, திரிந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன்
அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம்
பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில்
மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...