மேஷம்
மாறுபட்ட
அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள்
பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை
முழுமையாக நம்புவார்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
ரிஷபம்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த சோம்பல் நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில்
நிம்மதி உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நட்பு வட்டம்
விரியும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
மிதுனம்
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். குடும்ப அந்தரங்க
விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். கோபத்தால் இழப்புகள்
ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் முக்கிய
கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
கடகம்
உங்கள்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை
உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். புது ஏஜென்சி
எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை
ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
சிம்மம்
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை
நாடுவீர்கள். வழக்கில் அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு
வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில
சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
கன்னி
புதிய
திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து
யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.
வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள்.
உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
துலாம்
பால்ய
நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும்.
தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புது வேலை அமையும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில்
அமைதி நிலவும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
விருச்சிகம்
உங்கள்
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக
இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள்
கருத்துக்கு ஆதரவு பெருகும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
தனுசு
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணவரவு
திருப்தி தரும். உறவினர்கள் உதவுவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.
வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள்
ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
மகரம்
ராசிக்குள்
சந்திரன் செல்வதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து
நீங்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். செலவுகளைக்
குறைக்க முடியாமல் திணறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
கும்பம்
எதிர்காலம்
பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள்.
வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமாக
லாபம் உயரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
மீனம்
புதிய
பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப்
பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புது நட்பு
மலரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில்
மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...