தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழி பெயர்த்தும் பாடிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடலை எப்படியாகினும் வாரத்தில் ஒரு நாள் அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் வாரத்தில் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையன்று வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.அதே சமயம், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில்மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை ஒலிபரப்ப வேண்டும் என்றும், வந்தே மாதம் பாடலை பாட விருப்பமில்லாதவர்களை எந்த விதத்திலும் அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் தீர்ப்பில்நீதிபதி குறிப்பிட்டார்.ஆசிரியர் வாரியம் நடத்திய தேர்வில் வந்தே மாதம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்விக்கு வங்கமொழி என பதில் அளித்தும் மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று வீரமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.அப்போது, அந்த கேள்விக்கு மதிப்பெண் அளித்து, வீரமணிக்கு ஆசிரியர் பணி வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு எழுதிய கே.வீரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் இரண்டாம் தாளுக்கான 'டி' வகை வினாத்தாளில் கேள்வி எண் 107 இல் 'வந்தே மாதரம்' என்ற பாடல் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது? எனக் கேட்கப்பட்டு இருந்தது.அதற்கு நான் வங்க மொழி என பதில் அளித்து இருந்தேன். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்'கீ-ஆன்சரில்' சமஸ்கிருதம் என உள்ளது. ஆனால், அனைத்து பிஎட் பாடப் புத்தகங்களிலும் 'வந்தேமாதரம்' வங்க மொழியில் எழுதப்பட்டது என்றுதான் உள்ளது. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் 89 மதிப்பெண் பெற்ற என்னால், 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியவில்லை. எனவே, எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கி என்னை தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.
அதுவரை ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல் காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.கடந்த வாரம் இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், இந்த குழப்பத்தை தீர்க்க 'வந்தே மாதரம்' எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதை உரிய ஆதாரங்களுடன் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் நேரில் ஆஜராகி விளக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துகுமாரசாமி, 'வந்தே மாதரம்' சமஸ்கிருத வாய் மொழி பாடல் என்றும், ஆனால் முதலில் எழுதப்பட்டது வங்க மொழியில்தான் என்றும் விளக்கம் அளித்தார்.இதைப் பதிவு செய்த நீதிபதி எம்.வி.முரளிதரன், வழக்கின் தீர்ப்பை இன்று அளித்துள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...