கூகுள் தனது சொந்த ஜிப் செய்யும் பயன்பாட்டை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கியது, மேலும் இதற்க்கு முன் இருந்த ஐஒஎஸ்-ல் இந்தப்பயன்பாடு இருந்தது,
இப்போது அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படும் வகையில் உள்ளது. கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்திய புதிய ஆப் பொறுத்தவரை புகைப்படங்களை மோஷன் ஸ்டில்ஸ் செய்து ஜிப் படங்களாக மாற்றும் வசதி கொண்டுள்ளது.அதன்பின் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த புதிய கூகுள் ஆப். கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்திய இந்த புதிய மோஷன் ஸ்டில்ஸ் ஆப் பொறுத்தவரை கூகுள் பிளே ஸ்டேரில் மிக எளிமையாக பதிவிறக்கம் செய்யமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் மோஷன் ஸ்டில்ஸ் ஆப் இன்ஸ்டால் செய்து கேமரா மூலம் வீடியோ எடுப்பது போல காட்சிகளைப் பதிவுசெய்தால் போதும், அவற்றை ஜிப் அல்லது வீடியோவாக பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இடம்பெற்றுள்ள மற்றோரு சிறப்பம்சம் என்னவென்றால் வாட்டர்மார்க் சேர்ப்பது போன்ற சில வசதிகள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் படங்களின் அளவைக் குறைக்கும் வசதி இவற்றில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி முன் ஐபோன்களில் மட்டுமே இருந்தது, தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படும் வகையில் அமைந்துள்ளது.CLICK HERE TO DOWNLOAD APPLICATION
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...