அரசு, அரசு உதவிபெறும், தனியார்
தொழிற்பயிற்சி நிலையங்களில் முதற்கட்டமாக www.skilltraining.tn.gov.in என்ற
இணையதளம் வாயிலாக மே 10–ந் தேதி முதல் விண்ணப்பம் பெறப்பட்டு கலந்தாய்வு
மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றன. இதில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு
வாய்ப்பு வழங்குவதற்காகவும், காலியிடங்களை நிரப்புவதற்காகவும் இணையதளம்
வாயிலாக கடந்த 17–ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10–ந் தேதி வரை மீண்டும்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழிற்பிரிவுகள்,
கல்வித்தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க
கையேட்டில் தரப்பட்டுள்ளன. மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான
நிகழ்ச்சி நிரல் விண்ணப்பதாரர் சமர்ப்பிக்கும் செல்போன் எண்ணுக்கு
குறுஞ்செய்தி அனுப்பப்படும். இணையதளத்திலும் பின்னர் வெளியிடப்படும்.
அதன்படி, மாணவர்கள் ஒற்றைச்சாளர முறையில் தாங்கள் சேர விரும்பும்
தொழிற்பிரிவு மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை மாவட்ட கலந்தாய்வில்
தேர்வு செய்யலாம்.
இந்த தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...