மத்திய அரசின் 2001-2002 பொது பட்ஜெட்டில் ஓய்வூதியம் வழங்கும் சுமையை
கருத்தில் கொண்டு எதிகாலத்தில் ஓய்வூதியம் வழங்கும் முறையில்
சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அரசின் கொள்கை முடிவாக
முதன்முதலில் பாராளுமன்றத்தில் அறிவித்தது.மேலும் புதிய ஓய்வூதிய திட்டம்
2002-2003 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் அக்டோபர் 2003 முதல் பணியில்
சேரும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டம் நடைமறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.இந்த
அறிவிப்பினை தொடர்ந்து பாதுகாப்பு துறையில் (இராணுவம்) பணிபுரிபவர்களின்
கடும் எதிர்ப்பு காரணமாக பாதுகாப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கு
மட்டும் cpsயிலிருந்து விதிவிலக்கு அளித்து மத்திய அரசு உத்திரவிட்டது.
புதிய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் அந்த நிதியை
கையாள்வதற்காகவும்,ஆகஸ்ட் 23,2003 இல் ஓய்வுதிய நிதி ஒழுங்குப்படுத்துதல்
மற்றும் மேம்படுத்துதல் ஆணையம் (pension fund regulatory and development
authority PFRDA) என்ற அமைப்பு ஒன்றை மத்திய அரசு
எற்ப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களின் நிதியினையும்
கையாள்வதே இதன் பணியாகும்.
இதனை தொடர்ந்து 22.12.2003 இல் வெளியிட்ட மத்திய அரசின் நிதித் துறை
அறிவிப்பின் மூலம் 01.01.2004 முதல் மத்திய அரசு பணியில் சேரும் அனைத்து
வகை பணியாளர்களுக்கும் (பாதுகாப்பு படையை தவிர) CPSதிட்டத்தினை மத்திய
அரசு அவசர சட்டமாக நடைமுறைக்கு கொண்டு வந்தது.இதனால் டிசம்பர் 22ஆம் நாளை
CPSயில் உள்ளவர்களுக்கு கறுப்பு தினம் என்பதே சொல்லலாம்.மேலும்
29.12.2004 அன்று மத்திய அரசு PFRDA அவசர சட்டத்தை நிறைவேற்றியது..
2004 ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அமைந்த புதிய மத்திய
அரசும் CPS திட்டத்தினை முழுமனதார ஏற்று சட்டமாக்க துடித்தது.மேலும்
14வது பாராளுமன்றத்தில் அன்றைய நிதியமைச்சர் அவர்கள் 12.02.2005 அன்று
CPSஇன் PFRDA மசோதாவினை மக்களவையில் தாக்கல் செய்தார். இம்மசோதாவினை
ஆராய்வதற்காக பார்லிமென்ட் நிலைக் குழுவிற்கு அனுப்பட்டது. அதில் சில
மாற்றங்களை செய்து 14.11.2008 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார்
இடதுசாரி கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நிறைவேறாததால்,அந்த மசோதா
காலவதியாகிவிட்டது.
2010 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அமைந்த அதே மத்திய அரசு
மீண்டும் CPS இன் PFRDA மசோதாவினை அன்றைய நிதியமைச்சர் அவர்கள்
18.03.2011 இல் மக்களவையில் தாக்கல் செய்தார். பலகட்ட விவாதங்களுக்கு
பின்னர் மக்களவையில் 04.09.2013 அன்று CPS மசோதா நிறைவேற்றப்பட்டது.
04.09.2013 அன்று மக்களவையில் தாக்கல் செய்த cps மசோதாவில் இடம்பெற்றுள்ள
சில தகவல்கள்
Cps மசோதாவானது மொத்தம் 513 பக்கங்களை கொண்டுள்ளது. அதில் 135 முதல் 140
வரையுள்ள பக்கங்களில், இதில் இணைந்துள்ள மாநிலங்களை பற்றி கூறுகிறது.
04.09.2013 அன்று இத்திட்டத்தில் 26 மாநிலங்கள் இணைந்துள்ளது.
136வது பக்கத்தின் 2வது பத்தியில் கூறியுருப்பதாவது
The state governments here not obliged to join.they joined
voluntarily. only for the central government employes,it is mandatory
from 1.1.2004.
இதன் தமிழாக்கம்
நாங்கள் எந்த ஒரு மாநில அரசையும் CPS திட்டத்தை அமுல்படுத்த நிர்பந்தம்
செய்யவில்லை. அவர்களின் விருப்பத்தை பொறுத்ததே.இது மத்திய அரசு
ஊழியர்களூக்கு மட்டுமே.அது 01.01.2004 முதல் நடைமுறைக்கு வந்தது.
மசோதாவில் உள்ள தமிழக அரசை பற்றிய வரிகள்
I want to remind him that tamil nade also by a notification made on
6th August 2003, joined the new pension scheme with effect from
1.4.2003.
மசோதாவில் உள்ள மற்ற பக்கங்களில், இணைந்துள்ள சந்தாதாரர்களின்
எண்ணிக்கை, அவர்களிடம் பிடித்த தொகை, காப்பீடு செய்யும் நிறுவனங்கள்
மற்றும் காப்பீட்டின் வகைகளை பற்றி கூறுகிறது.
மக்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து 06.09.2013 இல் மாநிலங்களவையில் CPS
மசோதா நிறைவேற்றப்பட்டு,குடியரசு தலைவரால் 18.09.2013 அன்று ஒப்புதல்
வழங்கி 19.09.2013 ல் மத்திய அரசின் கெஜட்டில் ஓய்வூதியத் துறையால்
வெளியிடப்பட்டு CPS திட்டத்தை சட்டமாக்கப்பட்டுள்ளது.
CPS மசோதா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்களவையில் தாக்கல்
செய்யப்பட்டும் சட்டமாக்கப்படாமாலேயே பாராளுமன்ற நெறிமுறைகளுக்கு
மாறாகவும் மக்களாட்சிக்கு எதிராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது.என்பது
தான் இதில் முக்கியமான விசயமாகும்.
நிதி தொடர்பான அனைத்து ம்சோதாக்களும் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட
பின்னர் தான் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.ஆனால் CPSயானது
சட்டமில்லாமலே நடைமுறையில் இருந்தது.
இந்த CPSதிட்டமானது 2013ம் ஆண்டு வரை கேரளா,திரிபுரா,மேற்கு வங்காளம்
போன்ற மாநிலங்களில் அமுல்படுத்தவிலை.ஆயினும் இறுதியாக 1.4.2013 முதல்
கேரளாவிலும் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர்.மற்ற இரு
மாநிலங்களும் GPF நடைமுறையில் தான் இருக்கிறது.
இந்த திட்டத்தால் முழுக்க முழுக்க கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே
இலாபம். அரசு ஊழியர்களுக்கு வேதனைகளும் ஏமாற்றமும் தான் மிஞ்சும்.
மத்திய அரசு CPS கணக்குகளை நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்களை கொண்டு
பராமரிக்கப்படுகிறது. ஆனாலும் திட்டத்தால் ஊழியர்களுக்கு எந்த வித பலனும்
இல்லை......
இவன்
அ.ஜெயப்பிரகாஷ்
அரூர் ஒன்றியம். தருமபுரி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...