நீட் போன்ற எத்தகைய போட்டித் தேர்வுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகும்
வகையில் தமிழக மாணவர்கள் கற்றுக்கொடுக்கப்படுவார்கள் என அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்தார்.
மாநில பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்த
கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர்
கே.ஏ. செங்கோட்டையன், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தமிழகத்தில்
பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாக பாடத்திட்டத்தை மாற்றி
அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக கல்வியாளர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது . இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.தொழில்நுட்ப அடிப்படையில் பாடங்களை மாற்றி அமைத்தல்,நீட் போன்ற தேசிய அளவிளான போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்தல், தமிழக வரலாறு, கலாச்சாரம் போன்ற மரபு சார்ந்த அம்சங்களை இடம்பெறச் செய்தல் ஆகியன குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் போன்ற எத்தகைய போட்டித் தேர்வுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகும் வகையில் தமிழக மாணவர்கள் கற்றுக்கொடுக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...