சேலம்:
தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளியில் சேர வரும் மாணவர்களிடம், எமிஸ்
எண் கேட்டு, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதால், பெற்றோர்
அவதிக்குள்ளாகின்றனர். பள்ளிக் கல்வித்துறையில் மாற்றங்களை புகுத்த
விரும்பும் கல்வி அமைச்சர், இதை தீர்க்க முன்வருவாரா என பெற்றோர்
எதிர்பார்க்கின்றனர். நாடு முழுவதும் அனைத்து மாணவ, மாணவியரின்
விபரங்களும், கல்வி தகவல் மேலாண்மை எனும், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவு
செய்யப்பட்டு, ஒவ்வொரு மாணவனுக்கும் பிரத்யேக எண் வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி என அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பில் சேரும்போதே, இந்த விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதன் பின், இடையில் வேறு பள்ளிக்கு மாறுதல் பெறும் பட்சத்தில், அவற்றை எமிஸ் இணையதளத்திலும் அப்டேட் செய்ய வேண்டும்.
நடப்பு கல்வியாண்டிலும், எமிஸ் அப்டேட் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், தனியார் பள்ளிகள், எமிஸ் விபரங்களை தர மறுப்பதால், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முடியவில்லை என, பெற்றோர் குற்றஞ் சாட்டுகின்றனர்.
இது குறித்து, பெற்றோர் சிலர் கூறியதாவது: தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றுவதற்காக, மாற்றுச்சான்றிதழ் கேட்டால், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கின்றனர்; மேலும் தர மறுத்து தகராறு செய்கின்றனர். இதனால், கட்டாயமாக அங்கேயே படிக்க வேண்டியுள்ளது. மீறி மாற்றுச்சான்றிதழ் பெற்றால், எமிஸ் எண் தருவதில்லை. எமிஸ் எண் தராமல், முதல் வகுப்பை தவிர வேறு வகுப்புகளில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேர்க்க அனுமதிப்பதில்லை. இதனால், பலரும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.அரசு பள்ளிகளில் எமிஸ் எண் தராவிட்டாலும், மாணவர்களை சேர்ப்பதற்கு, கல்வித்துறை அலுவலர்கள்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...