தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்களையும் மீறி மிருகவதை நடைபெற்றுள்ளதால்,
ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய வேண்டுமென்று 'பீட்டா' அமைப்பு
உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளது.
'பீட்டா'அமைப்பின் வழக்கு மற்றும் மத்திய அரசின் தடை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக் கோரி தமிழகமெங்கும் மாபெரும் மக்கள் புரட்சி நடைபெற்றது. அதன் குவிமையமாக சென்னை மெரினா கடற்கரையில் 'தைப்புரட்சி' என்னும் பெயரில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடந்தது.
அதன் விளைவாக மத்திய அரசின் காட்சிப்படுத்தும் விலங்குகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வழிவகை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்களையும் மீறி மிருகவதை நடைபெற்றுள்ளதால், ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டுமென்று 'பீட்டா' அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பான போட்டோ மற்றும் விடியோ ஆதாரங்களினை தங்கள் சேகரித்து வைத்துள்ளதாக நீதின்றத்தில் தெரிவித்துள்ள 'பீட்டா' அமைப்பானது, இந்த வழக்கினை விரைவில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...