சென்னை, : ''ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை
குறைந்தது ஏன்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., அரசு எழுப்பிய கேள்வி
தொடர்பாக, சட்டசபையில் கடும் விவாதம் நடந்தது.
சட்டசபையில் நடந்த
விவாதம்:தி.மு.க., - அரசு: தி.மு.க., ஆட்சியில், 2010 - 11ல், ஆதிதிராவிட
நலத்துறை பள்ளிகள், 1,073 செயல்பட்டன.
இதில், 2.10 லட்சம் மாணவர்கள் படித்தனர். 296 உண்டி,
உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டன. இவற்றில், 40 ஆயிரத்து, 608 மாணவர்கள்
படித்தனர். ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வருகிறது. தற்போது,
1,134 பள்ளிகளில், 1.06 லட்சம் மாணவர்களும், 314 உண்டி உறைவிடப்
பள்ளிகளில், 27 ஆயிரத்து, 652 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.இவ்விபரம்
கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை
மிகவும் குறைந்துள்ளது. ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்ற
பழமொழிக்கேற்ப, அரசு செயல்படாததற்கு, இது ஒன்றே போதும்.கைத்தறி துறை
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: அரசு வழங்கிய பல்வேறு சலுகைகள் காரணமாக, ஆதிதிராவிட
மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து உள்ளது. அவர்கள் நகரங்களில் குடியேறி
உள்ளனர். அவர்களின் குழந்தைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால், ஆதிதிராவிடப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதை
உறுப்பினர் வரவேற்க வேண்டும்.அரசு: கல்வி கற்றுத்தராமல், ஆடு, மாடு
வழங்குகிறீர்கள்.அமைச்சர் தங்கமணி: அந்த திட்டத்தை எதிர்க்கிறீர்களா;
ஆதரிக்கிறீர்களா...அமைச்சர் ராஜலட்சுமி: ஜெ., ஆட்சியில், நிறைய பள்ளிகள்
திறக்கப்பட்டதால், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துஉள்ளது.எதிர்க்கட்சி துணைத்
தலைவர் துரைமுருகன்: மாணவர் எண்ணிக்கை ஏன் குறைந்தது என, அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் அளித்த பதிலுக்கு, அமைச்சர் ராஜலட்சுமி சரியான பதில்
அளித்துள்ளார்.அமைச்சர் தங்கமணி: ஆதிதிராவிட மக்களின் வாழ்வாதாரம்
உயர்ந்துள்ளதால், ஆதிதிராவிட பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததாக,
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். அரசு பள்ளிகள் அதிகம்
துவக்கப்பட்டதால், மாணவர்கள் அங்கு அதிகம் சேர்ந்ததால், அரசு ஆதிதிராவிட
பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என, அமைச்சர் ராஜலட்சுமி
கூறுகிறார். இதில் நீங்கள் குறை காண வேண்டாம்.அமைச்சர் செங்கோட்டையன்:
குடும்ப கட்டுப்பாடு காரணமாக, குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது.
இதுவும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவுக்கு ஒரு காரணம்.துரைமுருகன்: இது
உங்கள் கருத்தாக இருக்க முடியாது; யாரிடமிருந்தோ இறக்குமதியாகி
உள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...