வரும், 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுவதால், அரசு பள்ளி
ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்,
மறைந்த காமராஜரின் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
இது, தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டதால், 2011
முதல் அ.தி.மு.க., ஆட்சியில், சரிவர கொண்டாடப்படவில்லை. தற்போது,
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காமராஜரின் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட, அதிகாரப்பூர்வ
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,
காமராஜரின் ஆட்சி, அவரது எளிய வாழ்க்கை, அவரது கல்வி வளர்ச்சி பணிகள்
குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டு
உள்ளது. அதேபோல, மாணவர்கள் மத்தியில் போட்டி நடத்தி, பரிசு வழங்கவும்,
தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கல்வி வளர்ச்சி நாளை
சிறப்பாக கொண்டாடும் வகையில், வரும், ௧௫ம் தேதி சனிக்கிழமை, ஆசிரியர்கள்
விடுப்பு எடுக்கக் கூடாது என, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...