புதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு
வருகிறது. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது
குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.
‘அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்’ மூலம் மாணவர்களின் கல்வித்திறனை வளர்ப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.
அந்தவகையில், இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே அறிவியல் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிந்துள்ள நிலையில், கடந்த 24-ந் தேதி முதல் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பு பயிற்சிகள் பெற்று வருகின்றனர். பயிற்சிகள் பெறுவதோடு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு கல்வித்திறனை வளர்ப்பது குறித்து சில ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கி வருகின்றனர். இதுபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு வருகிற கல்வி ஆண்டில் (2018-2019) இருந்து 3 ஆண்டுகளுக்குள் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பாடத்திட்டங்களை மாற்ற உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த 20-ந் தேதி புதிய பாடத்திட்டங்கள் வடிவமைப்பது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2 நாட்கள் ஆலோசனையும் நடந்தது.
இந்த நிலையில் புதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டங்களினால் மாணவர்கள் எந்த வகையிலும் குழப்பம் அடைந்துவிடாதபடி, மாணவர்களுக்கு எப்படி கற்றுக்கொடுக்க வேண்டும்? அவர்களுக்கு எளிதில் புரியக்கூடிய வகையில் பாடத்தை புகட்டுவது எப்படி? என்பது குறித்து ஆசிரியர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.
முன்பெல்லாம் பாடத்திட்டங்களை மட்டும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தால் போதும் என்று இருந்த நிலை தற்போது மாறிவிட்டது. அந்த வகையில் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு என்ன? என்பது குறித்து இந்த சிறப்பு பயிற்சியில் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் திறன் அதிக அளவில் முன்னேற்றம் அடைந்து இருப்பதாக இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும், தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஆசிரியர்களும் தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது குறித்தும் சிறப்பு பயிற்சியில் ஆசிரியர்களுக்கு விளக்கமாக கூறப்பட்டது.
ஏற்கனவே அறிவியல், கணித பாட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிவடைந்துவிட்டது. தற்போது ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு நடைபெற்று வருகிறது. இது முடிந்ததும், வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரை சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கும், அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தமிழ் பாட ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...