'அரசு உதவி பெறும் பள்ளிகள், அதுபற்றி தெளிவான அறிவிப்பை, பள்ளிகளில் வைக்க
வேண்டும்' என்ற அரசின் உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, பெற்றோர்
குற்றம் சாட்டி உள்ளனர்.
தமிழகத்தில், 5,000 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில்,
ஆசிரியர்கள் நியமனம், அவர்களுக்கான ஊதியம் வழங்குவதற்கான செலவை அரசே
ஏற்றுள்ளது.
அதேபோல், தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மத்திய அரசின்
கல்வித் திட்டங்களும், இந்த பள்ளிகளில் செயல்படுத்தப்படுகின்றன.
கல்வி கட்டணம் : எனவே, மாணவர் சேர்க்கை, நலத்திட்ட உதவி கள் வழங்குதல்,
மதிய உணவு வழங்குதல் போன்றவற்றிலும், அரசு பள்ளிகள் போல, இந்த பள்ளிகள்
செயல்பட வேண்டும். மேலும், கல்வி கட்டணமும் வசூலிக்கக் கூடாது. ஆனால்,
பெரும்பாலான பள்ளிகளின் நிர்வாக கமிட்டிகள், தனியார் பள்ளிகளை போன்று, அரசு
உதவி பெறும் பள்ளிகளை நடத்துகின்றன.
மேலும், மாணவர் சேர்க்கையில் தங்களுக்கென தனி விதிகளை வகுத்து செயல்படுதல்,
அதிக கட்டணம் வசூலித் தல் போன்ற, பல விதி மீறல்களில் ஈடுபடுகின்றன. இவற்றை
தடுக்க, 'அரசின் உதவி பெறும் பள்ளி' என, பெற்றோருக்கு தெரியும் வகையில்,
இந்த பள்ளிகளின் பெயர் பலகைகளில், 'பளிச்' என, அறிவிப்பு இடம் பெற வேண்டும்
என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குற்றச்சாட்டு : ஆனால், பெரும்பாலான பள்ளிகள், இந்த உத்தரவை
பின்பற்றுவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தமிழக அரசு உரிய
நடவடிக்கை எடுத்து, அரசின் நிதியுதவி பெறும் பள்ளி, சுயநிதி பள்ளி என்ற
விபரத்தை, பெயர் பலகையில் இடம் பெற செய்ய வேண்டும் என, பெற்றோர்
வலியுறுத்தி உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...