பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி
சார்பில் போட்டியிட்டு நாட்டின் 14 வது ஜனாதிபதியாகும் ராம்நாத்கோவிந்த்
விவசாய குடும்பத்தில் பிறந்து சட்டம் பயின்று கவர்னர் வரை பல்வேறு பதவிகளை
வகித்தவர்..
2000ம் ஆண்டு 2வது முறையாக ராஜ்யசபா எம்.பி., ஆனார். * எம்.பி.,யாக
இருந்தபோது, உள்துறை, பெட்ரோலியம், சமூக நலம், சட்டம் மற்றும் நீதி,
எஸ்.சி., - எஸ்.டி., நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிலைக்குழுக்களில்
பணி. 1998 - 2002 வரை பா.ஜ., தலித் மோர்ச்சா பிரிவு தலைவராக இருந்தார். *
2002ல் இந்தியாவின் பிரதிநிதியாக ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பா.ஜ., செய்தி தொடர்பாளராகவும் இருந்தார். * லக்னோவில் உள்ள
பி.ஆர்.அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் கோல்கட்டா ஐ.எம்.எம்., கல்லூரி
ஆகியவற்றில் உறுப்பினராக பணிபுரிந்துள்ளார் * 2015 ஆக., 8ல் பீகார்
கவர்னராக நியமிக்கப்பட்டார். 2017 ஜூன் 20ல் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு
செய்யப்பட்டதால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். முதல் குடிமகன் * 2017
ஜூலை 20: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரை
தோற்கடித்து, நாட்டின் 14வது ஜனாதிபதி ஆனார்.
கே.ஆர்.நாராயணனுக்கு பின் தலித் பிரிவை சேர்ந்த 2வது ஜனாதிபதி என்ற
பெருமைக்குரியவர். உ.பி.,யில் இருந்து நிறைய பிரதமர்கள் வந்துள்ளனர்.
முதன்முறையாக அம்மாநிலத்தை சேர்ந்தவர் 'ராஷ்ட்ரபதி பவனில்' நுழைந்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...