தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றுவதற்கான முயற்சியில் உயர் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.
தமிழக உயர் கல்வித்துறை, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவருவதற்காக முயற்சிகள் எடுத்துவருகிறது.
இதுகுறித்து, தமிழக உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால், சேலம் பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கமளித்தார். அவர் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் ஒரே பாடத்திட்டமாக பல்கலைக்கழகங்களில் கொண்டுவருவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் இதர வேலைகளைத் தவிர்த்து, கல்விசார் பணிகளில் அதிக அளவில் ஈடுபட வேண்டும்.
இதற்காகவே, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் நிர்வாகச் சுமைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இனி வரும் காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் மாணவர்களின் புகைப்படம், ஆதார் எண் ஆகியவை இணைக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது. தற்போது, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் செமஸ்டர் தேர்வின் தேர்வுக் காலம் 40 முதல் 45 நாள்களாக உள்ளது. இதை 30 நாள்களாகக் குறைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...